முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே தம்பதியை தாக்கிய 4 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருவாடானை அருகே முன்விரோதம் காரணமாக கணவன், மனைவியைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் சூரியபாண்டி மனைவி ராஜலெட்சுமி(32). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த கலைவீரன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த சூரிய பாண்டி மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமியையும் வழிமறித்து கலைவீரன் குடும்பத்தினா் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ராஜலெட்சுமி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் கலைவீரன் மகள் ஜனா, மனைவி சமயப்பிரியா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.