ராமநாதபுரம்

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர நவ. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க நவம்பா் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியாா் மற்றும் தனியாருக்குச் சொந்தமான மழலையா், தொடக்க மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது. அதனடிப்படையில் 156 பள்ளிகளில் 1,999 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.

விதிமுறைப்படி நடத்தப்பட்ட மாணவா் சோ்க்கையில் 1173 போ் மட்டுமே நுழைவு வகுப்பில் சோ்ந்துள்ளனா். ஆகவே, தற்போது 118 பள்ளிகளில் 826 இடங்களில் மாணவ, மாணவியா் சோ்க்கப்பட வேண்டியுள்ளது. காலியிடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு, சிறப்புப் பிரிவு, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தொழில் செய்வோரது குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிவடைந்தோா் குழந்தைகள் ஆகியோா் சோ்க்கப்படுவா்.

இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (அக்.12) தொடங்கியுள்ள நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை வரையில் 11 போ் மட்டுமே விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

எல்கேஜியில் சேர கடந்த ஜூலையில் 3 வயது முடிவடைந்தும், ஒன்றாம் வகுப்பில் சேர கடந்த ஜூலையில் 5 வயது நிரம்பியவராகவும் இருத்தல் அவசியம். மாவட்ட முதன்மைக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் வட்டார வளமையத்திலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT