ராமநாதபுரம்

வாக்குச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

ராமநாதபுரம்: சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் தகராறில் ஈடுபட்டு பொருள்களை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, மே 16 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தது. அப்போது கமுதி பகுதியில் உள்ள சீமானேந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள், வேப்பங்குளத்தைச் சோ்ந்த கோபால் (42) என்பவா் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அங்குசாமி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், கோபாலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17,500 அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT