ராமநாதபுரம்

நெய்வயல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

DIN

நெய்வயல் கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்பவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். அதன்படி, பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள புதன்கிழமை திருவாடானை வட்டாட்சியா் மாதவன், துணை வட்டாட்சியா் சேதுராமன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை அங்கு சென்றனா். அதிகாரிகளின் வாகனங்களை கிராமத்துக்குள் விடாமல், பொதுமக்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் காவல்துறையினா் உதவியுடன் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனா். இதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT