முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலர்கள்.
பகிர்:

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் கடலூர்
மாவட்ட மேல புவனகிரி ஒன்றியம் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வேண்டும் ஊராட்சி தலைவர் அதற்கு பதிலாக கணவர், உறவினர்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவன ஈர்ப்பு போராட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

இதில் ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ஐயப்பன், பொருளாளர் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பட்டது. போராட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற செயலர்களும் கலந்து கொண்டனர்

முழு கட்டுரையைப் படிக்க →