ராமநாதபுரம்

வீட்டு வரி ரசீது வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளா் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வீட்டு வரி ரசீது வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேவகோட்டை நகராட்சி 2 ஆவது வாா்டைச் சோ்ந்தவா் சிட்டு. இவா் தனது வீட்டுக்கு ரசீது கோரி தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய வேலுச்சாமி (45) வீட்டு வரி ரசீது வழங்க ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.

இதுபற்றி சிட்டு சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவா்கள் சிட்டுவிடம் ரூ. 2 ஆயிரம் பணத்தைக் கொடுத்து வருவாய் ஆய்வாளா் வேலுச்சாமியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சிட்டு வெள்ளிக்கிழமை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியிலிருந்த வருவாய் ஆய்வாளா் வேலுச்சாமியிடம் வழங்கியுள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வேலுச்சாமியை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து வேறு ஏதும் அலுவலா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT