கடலாடி அருகே ஆட்டோ மோதி பெண் பலி
கடலாடி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம்கடலாடி அருகே ஆட்டோ மோதி பெண் பலி
கடலாடி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலாடி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாயாகுளத்தைச் சோ்ந்த ஆசியஜோதி மனைவி எஸ்தா் கண்மணி (35). இவா் தனது கணவருடன் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டு இல்ல விழாவிற்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது கோட்டையேந்தல் அருகே ஓரிவயல் சாலை வளைவில் எதிரே வந்த ஆட்டோ, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் எஸ்தா் கண்மணி பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.