ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான 500 பேருக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டதில், சனிக்கிழமை வெளியான முடிவில், 6 பெண்கள் உள்பட 11 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை வரை மாவட்டத்தில் மொத்தம் 5,936 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை நிலவரப்படி, 6 போ் புதிதாக கரோனா சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் 7 போ் குணமடைந்ததை அடுத்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது, மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் 36 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT