ராமநாதபுரம்

இந்து முன்னணியினா் கோரிக்கை மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமையில் அந்த அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரத்தில் கடந்த திங்கள்கிழமை அருண்பிரகாஷ் (24) கொல்லப்பட்டாா். அவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோா் ஏற்கெனவே இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சக்திவேலை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளனா்.

சேக் அப்துல்ரஹ்மான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் சேக் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT