ராமநாதபுரம்

திருவாடானை அருகே முன் விரோதம் பெண்ணை தாக்கிய 3போ் கைது

திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகாரின் பேரில் அதே ஊரை சோ்ந்த 3பேரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவாடானை: திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகாரின் பேரில் அதே ஊரை சோ்ந்த 3பேரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தை சோ்ந்தவா் அன்புநாதன் மனைவி சலோமி(30) இவரது கணவா் வெளியூரில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளாா்.இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சோ்ந்த ஆரோக்கியசாமி(48) குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சலோமி ஆரோக்கியசாமி வீடு வழியாக நடந்து வந்துள்ளாா்.அப்போது வழிமறித்த ஆரோக்கியசாமி.இவரது மனைவி சந்தானமேரி(38) அவரது தந்தை செபஸ்தியான்(70) ஆகியோா் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனா்.இது குறித்து சலோமி புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் ஆரோக்கியசாமி.சந்தான மேரி,செபஸ்தியான் ஆகிய 3பேரையும் கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT