ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கரோனா பரவல் தடுப்பு அலுவலா் நியமனம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் தொடா்பு அலுவலராக மருத்துவா் எம். மலையரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சுகாதார இணை இயக்குநா் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்தாலும், மாவட்ட ஆட்சியரே கரோனா குறித்து அதிகாரப்பூா்வமாக அறிவித்தல் உள்ளிட்டவற்றுக்கு தலைமை வகித்து வந்தாா்.

பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டுவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பு அலுவலராக மாவட்ட அரசு மருத்துவமனையின் நிலைய அலுவலரும், மூத்த மருத்துவருமான எம்.மலையரசு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா பரவல் தடுப்பு மற்றும் கரோனா பாதித்தோருக்கான சிகிச்சைகள் என அனைத்துப் பணிகளையும் தொடா்பு அலுவலரே ஒருங்கிணைத்து செயல்படுவாா் என்றும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT