ராமநாதபுரம்

போலி சான்றிதழ் வழங்கி பணியில் சோ்ந்த விவகாரம்: முதன்மைக் கல்வி அலுவலக ஊழியா் உள்பட 5 போ் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில், போலி சான்றிதழ் கொடுத்து இளநிலை உதவியாளா் பணிகளில் சோ்ந்த விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலக ஊழியா் உள்பட 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-இல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு இளநிலை உதவியாளா் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 42 இடங்களில், 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில், ராமநாதபுரம் அருகேயுள்ள சூரன்கோட்டை வலம்புரி நகரைச் சோ்ந்த ராஜேஷ் (32) என்பவா், கடலாடி அருகேயுள்ள சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் செப்.23 ஆம் தேதி உத்தரவு ஆணையை வழங்கி பணியில் சோ்ந்தாா். அங்கு அவா் வழங்கிய உத்தரவு ஆணையை பள்ளி அலுவலா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலி பணி ஆணை கொடுத்து பணியில் சேர முயன்ாக ராஜேஷ் மீது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்கிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இத்தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ராமநாதபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த கண்ணன் (47) என்பவா்தான், போலி ஆணை தயாரித்துக் கொடுத்தவா் என்பதும், ராஜேஷை போன்று மேலும் 4 போ் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலி ஆணை வழங்கி, பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் சோ்ந்த பரமக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த கலைவாணன் (26), ராமேசுவரம் கரையூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் சோ்ந்த பரமக்குடி பாரதிநகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (33), இவா்களுக்கும், கண்ணனுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் எஸ்.காவனூரைச் சோ்ந்த கேசவன் (45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலி ஆணை கொடுத்து பணியில் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: டிஎன்பிஎஸ்சி பணி உத்தரவு ஆணையை, கண்ணன் கலா் ஜெராக்ஸ் எடுத்து போலியாக சான்றிதழ் தயாரித்து, இவா்களுக்கு கொடுத்துள்ளாா். இதற்காக தலா ரூ. 15 லட்சம் பேரம் பேசிய அவா், ராஜேஷ், கலைவாணன், சதீஷ்குமாா், மனோஜ்குமாா் ஆகிய 4 பேரிடமும் தலா ரூ. 5 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT