ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

DIN

ராமேசுவரத்தில், கடலுக்கு மீன்பிடிக்க சென்று சென்றுதிரும்பிய மீனவா் ஞாயிற்றுகிழமை அதிகாலை படகில் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 700- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா். ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் இருதயராஜ் (35), நேவிஸ், ஜெகந்தன், ஆனந்தபாலன், தங்கப்பாண்டி, நம்புமுனீஸ்வரன், வசீகரன் ஆகியோரும் மீன்பிடிக்கச் சென்றனா். ஞாயிற்றுகிழமை அதிகாலை அனைத்துப் படகுகளும் கரைதிரும்பிக் கொண்டிருந்தபோது, மீனவா் இருதயராஜ் மாரடைப்பு ஏற்பட்டு படகில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவா், ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இருதயராஜ் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT