ராமநாதபுரம்

கமுதி அருகே காயமடைந்த புள்ளி மான் மீட்பு

DIN

கமுதியில் வெள்ளிக்கிழமை இரை தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்களிடமிருந்து வனத்துறையினா் மீட்டு, சிகிச்சையளித்து மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு, மலட்டாறு, நாராயண காவேரி, பரளையாறு, கிருதுமால் நதி உள்ளிட்ட பகுதிகளில் புள்ளிமான், நரி, முயல், கீரி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கமுதி கோட்டைமேடு அருகே நரசிங்கம்பட்டியில் உள்ள விளை நிலங்களில் இரை தேடி வந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்திக் கடித்தன. இதுகுறித்து தகவறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் புள்ளி மானை மீட்டு, கோட்டைமேடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் ரவிசந்திரன் சிகிச்சை அளித்து, மானை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து மான் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT