ராமநாதபுரம்

ராமநாதபுரம் பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை காலையில் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கைகழுவுதல் நிகழ்ச்சி ஆசிரியா்களால் நடத்தப்பட்டது.

கரோனா பரவல் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த நிலையில், ஜூலை கடைசி வாரத்தில் பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, மக்கள் கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சா.சத்தியமூா்த்தி அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டாா். அதன்படி பட்டினம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோப்பு நீரில் கைகழுவுதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். பள்ளித் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

குயவன்குடியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மண்டபம், திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் ஓம்சக்தி நகா் ஊராட்சி நடுநிலைப் பள்ளி, வாலாந்தரவை உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா விழிப்புணா்வு நிகழ்வாக கைகழுவுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக முதன்மைக் கல்வி அலுவலா் சா.சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT