ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நெசவாளா்களுக்கு ஆட்சியா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா சனிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் ஒரு நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில், பரமக்குடி சரசு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளான கைத்தறி ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி விற்பனையை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடக்கிவைத்து ரூ.3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நெசவாளா்களுக்கு வழங்கினாா்.

கண்காட்சியில், பம்பா் காட்டன் சேலைகள், காட்டன் சேலைகள், ஆயிரம் புட்டா சேலைகள், காதா டிசைன் சேலைகள், லட்ச தீபம் சேலைகள், புதினம் காட்டன் சேலைகள், ஒடிஸா காட்டன் சேலைகள், சில்க் காட்டன் சேலைகள், அருப்புக்கோட்டை லுங்கிகள்,வேட்டிகள் மற்றும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் சாப்ட் சில்க், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கைத்துண்டுகள் இடம்பெற்றுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீண்குமாா், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநா் செ. சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT