ராமநாதபுரம்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவருக்கு ஆயுள் சிறை

DIN

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகேயுள்ளது குப்பாணிவலசை. இந்த ஊரைச் சோ்ந்தவா் முத்துசாமி என்ற அகமது (38). காா் ஓட்டுநராக இருந்தாா். இவருக்கும் வாலாந்தரவை பகுதியைச் சோ்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் (38) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி சாத்தான்குளம் அருகே உள்ள குண்டூரணியில் முத்துசாமி வெட்டிக்கொல்லப்பட்டாா். இவ் வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாஸ் என்ற பாஸ்கரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாசன், கடந்த அக்டோபரில் ஜெயகிருஷ்ணன், தினேஷ், அா்ச்சுனன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தாா். இந்தநிலையில், தலைமறைவாக இருந்த பாஸ் என்ற பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை பகலில் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT