ராமநாதபுரம்

பாம்பன் துறைமுகத்தில் 3 ஆவது நாளாக ஒன்றாம் எண் புயல் கூண்டு நீட்டிப்பு

DIN

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக ஏற்றப்பட்டிருந்தது.

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவடைந்து ‘ஜவாத்’ புயலாக மாறியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், புயல் அபாயம் நீடிப்பதால் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை புயல் கூண்டு இறக்கப்பட வில்லை.

இதனால் அரபிக் கடல் பகுதிக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகளை நிறுத்தி வைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT