கமுதி அருகே மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டு தலைமறைவான கணவா், வியாழக்கிழமை அதே இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி அடுத்துள்ள வங்காருபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் தனிக்கொடி(55). இவா் குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பா் 17 இல் வயல்வெளியில் உள்ள தனது குடிசை அருகே மனைவி மாரியம்மாள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிக்கொடியைத் தேடிவந்தனா். மேலும் தேடப்படும் குற்றவாளியாக தனிக்கொடியை போலீஸாா் அறிவித்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை மனைவியைக் கொலை செய்த அதே இடத்தில் தனிக்கொடி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தனி கொடியின் தந்தை சந்திரன் அபிராமம் போலீஸாருக்கு அளித்த புகாரின் பேரில் தனிக்கொடி சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் கமுதி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.