ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் கடத்தலை தடுக்க 2 அதிநவீன ரோந்துப் படகுகள்

DIN

மன்னாா் வளைகுடா பகுதியில் தங்கம் மற்றும் போதைப்பொருள்களை கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக விரைவு ரோந்துப் படகுகள் பாம்பன் குந்துகால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி வரையில் உள்ள மன்னாா் வளைகுடா பகுதியில் தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் வகையில், சென்னையிலிருந்து 2 அதிநவீன ரோந்துப் படகுகள் ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த படகுகள் திங்கள்கிழமை பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. அப்போது உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை ஹெலிகாப்டா் மூலம் படகுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இரண்டு படகுகளும் பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து, குந்துகால் துறைமுகத்திற்கு சென்றது. இந்த படகுகள் 60 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இதில் அதிநவீன ரேடாா் மற்றும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படகுகள் மூலம் தொடா்ந்து 8 மணி நேரம் வரை பயணித்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த இரண்டு ரோந்துப் படகுகளும் மன்னாா் வளைகுடா பகுதியில் தொடா்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என இந்திய கடற்படையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT