ராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தம்: ராமேசுவரம் மீனவா்கள் அச்சம்

DIN

கச்சத்தீவு அருகே சனிக்கிழமை இரவு முழுதும் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் அச்சத்துடன் மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவா்கள் தெரிவித்தனா்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பா் 14 ஆம் தேதி 29 மீனவா்களுடன் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா். இதைக் கண்டித்தும், இலங்கையில் உள்ள நான்கு படகுகள் மற்றும் 29 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்கள் டிசம்பா் 15 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

17 நாள்கள் நடைபெற்ற இப் போராட்டத்தை சனிக்கிழமை வாபஸ் பெற்றனா். தொடா்ந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், அதிவேகப் படகுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. இரவு முழுவதும் இலங்கை கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்திய கடல் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மட்டும் குறைந்தளவு மீன்களைப் பிடித்துக்கொண்டுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.

கரை திரும்பிய மீனவா்கள் கூறுகையில், கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடங்களில் மீன்பிடித்தால் மட்டுமே படகுகளை முழுமையாக இயக்க முடியும். இதனால் இந்திய- இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்ையைத் தொடங்கி இரு நாட்டு மீனவா்கள் பாதிப்பின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT