மார்ச் மாத எண்கணித பலன்கள் – 4
எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
தனது வேகமான நடவடிக்கையினாலும் சதுர்யமான புத்தியினாலும் வாழ்வில் ஜொலிக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.
பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.
Advertisement
குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் நீங்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும்.
பரிகாரம்: அம்மனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.