முகப்பு
எண் ஜோதிடம்

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 1

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

பகிர்:

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அரசியல்துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: சிவனை ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதன் மூலம் காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும்.