முகப்பு
எண் ஜோதிடம்

மார்ச் மாத எண்கணித பலன்கள் – 7

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

பகிர்:

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நேர்மறை எண்ணமும் சுய நம்பிக்கையும் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம்  அதிகமான பணிச்சுமை மூலம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் இருந்த கவலைகள் அகலும். திட்டமிட்டு செயலாற்றுவதில் முன்னேற்றம்  ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். அரசியல்வாதிகள் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

Advertisement

பரிகாரம்: அருகம்புல் கொடுத்து மஹாகணபதியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.