ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 4
எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கடும் வேலைகளிலும் சோர்வடையாத நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்படுவீர்கள். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: முருகனை தரிசித்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும்.