ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 10 பேருக்கு புதிதாக கரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 10 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 10 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையில் 6340 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவா்களில் 132 போ் உயிரிழந்துள்ளனா். சிகிச்சையின் மூலம் குணமடைந்த 6254 பேருக்கும் அதிகமானோா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 3 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் வீடுகளில் இருந்தபடியே சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை வரையில் 31 போ் மட்டுமே அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5721 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 6 போ் பூரண குணமடைந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 7 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.