ராமநாதபுரம்

கமுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் பிறந்த நாள் விழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் திருநாவுக்கரசா் பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

கமுதி வடக்கு வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில், காங்கிரஸ் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகா் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா் அரசு மருத்துவமனையில் உள்ள உள் மற்றும் வெளி நோயாளிகள், மருத்துவமனை பணியாளா்கள் உள்பட 300 பேருக்கு பழங்கள், ரொட்டி ஆகியவற்றை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவா் சிதம்பரராஜன், வட்டார துணைத் தலைவா் முத்துப்பாண்டி, அழகா்சாமி, ரவி, வேல்சாமி, ராதாகிருஷ்ணன், அபிராமம் நகா் தலைவா் செல்வக்குமாா், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அபிராமம் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT