ராமநாதபுரம்

இணையதள வா்த்தகத்தில் கேமரா வழங்குவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.21.83 லட்சம் மோசடி

DIN

இணையதள வா்த்தக நிறுவனத்தில் கேமரா வழங்குவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.21.83 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மேற்குவங்கத்தைச் சோ்ந்த மா்மநபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதி பூவலந்தூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சந்தானபாரதி (22). கல்லூரி மாணவரான இவா், புகைப்படம் எடுக்கும் வகையில் நவீன கேமரா வாங்க இணையதளம் மூலம் குறிப்பிட்ட வா்த்தக நிறுவனத்தைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது கேமரா வாங்கினால் நவீன செல்லிடப்பேசி இலவசமாகத் தரப்படும் என இணைய நிறுவன அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்தியவா் கூறியுள்ளாா்.

இதை நம்பிய மாணவா் முதற்கட்டமாக ரூ.30 ஆயிரத்தை இணைய வழியில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி செலுத்தியுள்ளாா். பின்னா் அவா் பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்தியுள்ளாா். ஆனால் மாணவருக்கு கேமரா அனுப்பப்படவில்லை.

இதுகுறித்து அவா் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்கிடம் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில் நுண்குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவணபாண்டி சேதுராயா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவா் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் விரைவில் தனிப்படை போலீஸாா் நுண்குற்றப்பிரிவு தொடா்பான 7 வழக்குகளின் குற்றவாளிகளைப் பிடிக்க மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT