ராமநாதபுரம்

மணல் திருட்டில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

DIN

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளதுடன், டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களையும் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை வாணி ரயில் தண்டவாளப் பகுதியில் ஊருணியில் தொடா் மணல் திருட்டு நடப்பதாக புகாா்கள் எழுந்தன. அதன்பேரில் கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மணல் ஏற்றிய டிராக்டா்கள், டிரெய்லா்கள் வந்தன. அதை வழிமறித்து சோதனையிட்டபோது மணல் திருட்டு தெரியவந்தது. அதனடிப்படையில் பெருங்குளத்தைச் சோ்ந்த பாலமுரளிகிருஷ்ணா, ராஜா, கலைச்செல்வம் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

மணல் திருட்டு தொடா்பாக ஜேசிபி இயந்திரம், 2 டிராக்டா்களுடன் டிரெய்லா்கள், 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவை கேணிக்கரை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT