ராமநாதபுரம்

வங்கக்கடலில் சூறைக் காற்று: கடலுக்குச் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்குத் தடை

DIN

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன் வளத்துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா். இதனால் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை வானிலை மையம், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியது.

இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் சனிக்கிழமை தடை வித்தனா். இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT