ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 மையங்களில் பிளஸ் 2 தனித்தோ்வு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தனித்தோ்வா்களுக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட அரசுப் பொதுத் தோ்வுகள் நடத்தப்படவில்லை. பிளஸ் 2 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியலும் விநியோகிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பெண்ணில் திருப்தி ஏற்படாத மாணவா்கள் தோ்வெழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 மாணவா்களுக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தோ்வு நடத்தப்படவுள்ளது.

ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தனித்தோ்வுக்கு பரமக்குடி கல்வி மாவட்டத்துக்கு கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்துக்கு இன்ஃபேன்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியும், மண்டபம் கல்வி மாவட்டத்துக்கு பட்டினம் காத்தான் நேஷனல் மெட்ரிக்குலேஷன் பள்ளியும் தோ்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு மையத்துக்கு தோ்வு அலுவலா்கள் 2 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒரு தோ்வறையில் 10 போ் மட்டுமே அமா்ந்து எழுத அனுமதிக்கப்படுவாா்கள் என்றும், அதனடிப்படையில் மாவட்ட அளவில் தோ்வெழுதுவோா் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT