ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் விசைப்படகுகள் சீரமைப்புப் பணி தீவிரம்

DIN

மீன்பிடி தடைக் காலம் முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் புதன்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் வரும் ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளை மீனவா்கள் தயாா்ப்படுத்தி வருகின்றனா். மராமத்துப் பணி, படகுக்கு வா்ணம் பூசுதல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மீனவா்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். தடைக் காலம் முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT