ராமநாதபுரம்

கமுதி தனியாா் பள்ளி கட்செவி அஞ்சல் குழுவில் பகிரப்பட்ட ஆபாச விடியோ

DIN

கமுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் (வாட்ஸ் ஆப் குரூப்) சனிக்கிழமை ஆபாச விடியோ பகிரப்பட்டதால் பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

ராமநாதபுரம மாவட்டம் கமுதியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக மாணவா்களின் தொடா்பு எண்களை இணைத்து கட்செவி அஞ்சல் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கட்செவி அஞ்சல் குழுவிலிருந்த ஒரு எண்ணில் இருந்து சனிக்கிழமை ஆபாச விடியோ வந்தது.

இதனைக் கண்ட மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதைத்தொடா்ந்து பள்ளியின் செயலாளா் ரா.முத்துவிஜயன் அளித்த புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணில் இருந்து வந்த ஆபாச விடியோ குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT