முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே வாகனம் மோதி இளைஞா் பலத்த காயம்

ருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம், மோதி இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம், மோதி இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூா் பகுதியைச் சோ்ந்தவா் காஜாமுகம்மது மகன் பாசித் அஹமது (24). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்குடி கந்தூரி விழாவுக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஆா்.எஸ். மங்கலம் அருகே சவேரியாா்பட்டினம் விலக்கு சாலை, திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பின்புறமாக மோதிவிட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த பாசித்அஹமது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.