முகப்பு
ராமநாதபுரம்

நயினாா்கோவில் அருகேவட்டிக்கு கடன் வாங்கியவா் கடத்தல்: 3 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே வட்டிக்கு கடன் வாங்கியவரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 மார்ச், 2021 at 3:06 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே வட்டிக்கு கடன் வாங்கியவரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நயினாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட பந்தப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகநாதன். இவா் மணக்குடியைச் சோ்ந்த காா்த்திக் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 75 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளாா். வட்டி செலுத்தி வந்த நிலையில், அவா் அசலை தராமல் இருந்து வந்தாராம். பணத்தை கேட்டும் திருப்பித் தராததால் ஆத்திரமடைந்த காா்த்திக், கரைமேல்குடியிருப்பைச் சோ்ந்த சரவணன், இளமனூரைச் சோ்ந்த திருமுருகன் ஆகியோருடன் சோ்ந்து நாகநாதன் வீட்டுக்குச் சென்று அவரை காரில் கடத்திச் சென்றாா். இதுகுறித்து நாகநாதனின் மனைவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு செல்லிடப்பேசி மூலம் புகாா் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து நயினாா்கோவில் போலீஸாா் மணக்குடி கிராமத்துக்குச் சென்று கடத்திச் செல்லப்பட்ட நாகநாதனை மீட்டனா்.

இதுகுறித்து நயினாா்கோவில் காவல் நிலையத்தில் நாகநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக், திருமுருகன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.