தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
தி கேரளா ஸ்டோரி - 2
தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
Advertisement
Advertisement
ராகாசா
மானசா சர்மா இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் திகில் கலந்து எடுக்கப்பட்டு வெளியான தெலுங்கு மொழிப்படம் ’ராகாசா’.
இந்தத் திரைப்படத்தில் சங்கீத் சோபன், நயன் சரிகா, வெண்ணெலா கிஷார், கெட்டப் சீனு, பிரம்மாஜி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராகாசா திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மனிதன் தெய்வமாகலாம்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம்.
கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டிஎன் 2026
நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதி, அரசியல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள ’டிஎன் 2026’ படத்தை, அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
முஸ்தபா முஸ்தபா
இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் முஸ்தபா முஸ்தபா.
இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த வார ஓடிடி (ஹேப்பி ராஜ்)
ஹேப்பி ராஜ் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும், முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பிரதிசாயா
நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வெளியான புதிய படம் பிரதிசாயா. இந்தப் படத்தை, இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பிரதிசாயா திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
லெச்சிந்தி மஹிலா லோகம்
தெலுங்கில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் 'லெச்சிந்தி மஹிலா லோகம்''. இந்தப் படத்தில் மஞ்சு லட்சுமி, அனன்யா நாகல்லா, ஸ்ரீராம சந்திரா, ஹரி தேஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் காணக் கிடைக்கிறது.
நீ ஃபாரெவர்
அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் நீ ஃபாரெவர்.
இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
பேண்ட் மேளம்
ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி நடிப்பில் சதீஷ் ஜவ்வாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேண்ட் மேளம்.
இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.