ராமநாதபுரம்

100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி எண், எழுத்து வடிவத்தில் நின்ற கல்லூரி மாணவியா்அதிகாரிகள் பாராட்டு

DIN

ராமநாதபுரம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியா் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் எண் மற்றும் எழுத்து வடிவத்தில் நின்றது பாா்ப்போரை வியக்க வைத்தது.

ராமநாதபுரம் நகா் கேணிக்கரை சாலையில் உள்ள கல்லூரியில் புதன்கிழமை காலையில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவியருக்கு முதல் தலைமுறை வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

முக ஓவியம், தோ்தல் லட்சிணை மாதிரி வடிவமைப்பு, மெளன நடிப்பு, வாக்களித்ததன் அவசியம் என பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் மாணவியா் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். போட்டிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா், காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

போட்டியின் முக்கிய நிகழ்வாக நூறு சதவிகித வாக்குப்பதிவு என்பதை எண் மற்றும் ஆங்கில எழுத்து வடிவத்தில் மாணவியா் நின்று காட்டினா். போட்டிகளின் இறுதியாக வாக்களிப்பது குறித்த உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க அதை மாணவியா் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சி குறித்து மாணவியா் கூறுகையில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள நாங்கள் அனைவரும் வாக்குப்பதிவன்று மையங்களுக்குச் சென்று மனச்சாட்சிப்படி வாக்களிப்போம் என்றனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ம.பிரதீப் குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் மு.சுமதி, ராமநாதபுரம் வட்டாட்சியா் வி. ரவிச்சந்திரன் மற்றும் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் கயிலைநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT