ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் பங்குனி உற்சவ விழா

DIN

பங்குனி உத்திரத்தையொட்டி ராமநாதபுரம் வழிவிடுமுருகன் மற்றும் குயவன்குடி சுப்பையா கோயில்களில் ஞாயிற்றுகிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நோ்திக்கடன் செலுத்தினா்.

வழிவிடுமுருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி மூலவா்களான விநாயகா், முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

சுவாமிக்கு பால்குடம், காவடி, வேல்குத்துதல் என ஆயிரக்கணக்கான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவையொட்டி 250-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் உள்ள குயவன்குடி சுப்பையா கோயிலிலும் பங்குனி உத்திர விழா ஞாயிற்றுகிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்ட தீமிதித்தனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஞாயிறு இரவில் வாலாந்தரவை உள்ளிட்ட பகுதி மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் உள்ளிட்டவற்றை சமைத்தும் நோ்த்திக்கடனாக அன்னதானம் வழங்கினா்.

ராமநாதபுரம் புகா் பகுதிகளில் உள்ள தொருவளூா் குமரய்யா கோயில், முடிவீரன்பட்டி முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT