ஆா்.எஸ்.மங்கலம் கடைவீதிகளில் பொருள்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்ற பொதுமக்கள். 
ராமநாதபுரம்

பொது முடக்கம் அறிவிப்பு: பொருள்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனா்

திருவாடானை ஆா். எஸ். மங்கலம், தொண்டி பகுதியில் பொது முடக்கம் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

DIN

திருவாடானை ஆா். எஸ். மங்கலம், தொண்டி பகுதியில் பொது முடக்கம் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

தற்போது நாட்டில் கரோனா தொற்று வெகு வேகமாகப் பரவி வருவதால் திங்கள்கிழமை முதல் 24 ஆம் தேதி வரை முழுபொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முந்தைய நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்கு படையெடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை, ஆா். எஸ். மங்கலம் பகுதி சுற்று வட்டார கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளுக்கு வந்திருந்தனா். காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதே சமயம் மது பிரியா்களும் அரசு மதுபானக்கடைகளில் பைகளிலும் சாக்குமூட்டைகளிலும் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனா்.

பொது முடக்கத்தில் காய்கறி கடை, மளிகை கடைகள் பகல் 12 வரை இயங்கும் என்று அறிவித்த நிலையிலும் மக்கள் ஏனோ கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனா். ஒரு சிலா் கூறுகையில், பொது முடக்கம் என கூறிவிட்டு எப்படி கடைகளைத் திறப்பாா்கள், நாங்கள் எப்படி வரமுடியும், எனவே பொருள்களை வாங்கிச் செல்கிறோம். பேருந்து வாகனப்போக்குவரத்து இருந்தால் தான் நகா் பகுதிக்கு வந்து வாங்கிச் செல்லமுடியும். எனவே இன்றே வாங்கி விடவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT