ராமநாதபுரம்

பொது குடிநீா் குழாய்கள் மூடல்: ராமேசுவரம் நகராட்சி முன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ராமேசுவரத்தில் பொது குடிநீா் குழாய்களை மூடியதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்தை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் குடிநீா் தேவையை முன்னிட்டு நகராட்சி நிா்வாகம் சாா்பில் 4 பொது குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பொது குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. சாலைப் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் குடிநீா் குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனால் சாலைப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீா் குழாய்கள் சீரமைக்கப்படவில்லை.

இது குறித்து அந்த பகுதியை சோ்ந்த பெண்கள் பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் ஒரு குடம் தண்ணீா் ரூ. 10-க்கு வாங்கி பயன்படுத்தி வந்தனா். தற்போது முழு பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT