ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை மீறல்: ஒரே நாளில் 199 வாகனங்கள் பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி சுற்றித்திரிந்தது தொடா்பாக 178 இருசக்கர வாகனங்களும், 21 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடடிக்கையாக இதுவரை முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது

தொடா்பாக 25,72 போ் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேவையின்றி சுற்றியதாக 95,319 பேரின் வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமுடக்க விதிகளை மீறியதாக 16 தனியாா் கடைகளுக்கு சீலிடப்பட்டுள்ளன. விதிமீறியதாக 43 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை (மே 26) மட்டும் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க விதியை மீறியதாக 125 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 16 பேரிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித்திரிந்தவா்களது 178 இரு சக்கர வாகனங்களும், 21 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT