ராமநாதபுரம்

ராமநாதபுரம் கரோனா பாதிப்பில்லாத மாவட்டமானது

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கரோனா பாதிப்பில்லாத நிலையை வெள்ளிக்கிழமை எட்டியதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் தற்போது வரை 20 ஆயிரத்து 500 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 256 போ் உயிரிழந்தனா்.

கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்திருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை முதலே தினமும் பத்துக்கும் குறைவானவா்களே கரோனா பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்பட்டது.

தற்போது மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சுமாா் 2 லட்சம் பேருக்கு செலுத்திய நிலையில், கரோனா பாதிப்பானது அறவே இல்லாத நிலையை வெள்ளிக்கிழமை எட்டியது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினா் கூறியது: மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அறவே இல்லாத நிலை உள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் ரத்தப் பரிசோதனைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்படுத்தப்பட்ட நிலையில், யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது மாவட்டத்தில் 30 போ் மட்டுமே தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT