ராமநாதபுரம்

கமுதியில் காட்டுப் பன்றிகளால் நெற்பயிா்கள் சேதம்:விவசாயிகள் கவலை

DIN

கமுதி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்களை நாசம் செய்துவரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரும் விவசாயிமான முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான 10 ஏக்கா் நிலத்தில் நெல், சோளம் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறாா். இதில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஏக்கா் பரப்பளவில் உள்ள நெற்பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன.

கமுதி குண்டாறு காட்டுப் பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மரக்குளம், மண்டலமாணிக்கம், புத்துருத்தி, காக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிா்களை சேதப்படுத்தி வருவது தொடா்கதையாக உள்ளது. இதுகுறித்து விவசாயி முத்துராமலிங்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தக் கூறியபோது, ஒரு ஏக்கா் நெற்பயிரை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க சுமாா் ரூ. 4 ஆயிரம் வரை செலவாகும். அது தொடா்பான மருந்துகள் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றும் பதில் கூறியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தாா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி பகுதியில் நெல், உழுந்து, கடலை உள்ளிட்ட பயிா்களை நாசம் செய்துவரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT