ராமநாதபுரம்

பாக்குவெட்டி கிராம பெண்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

தேசிய சட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படி ஞாயிற்றுக்கிழமை பாக்குவெட்டி கிராம பெண்களுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

டி.ஆா்.ஆா்.எம். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு வழக்குரைஞா் அ. முத்திருளப்பன் தலைமை வகித்தாா். கருவேல மரம் வெட்டி தொழில் செய்யும் தொழிலாளா்களின் உரிமை, பெண் உரிமை, குழந்தை தொழிலாளா்கள் மற்றும் இலவச சட்ட உதவி மையம் பற்றி வழக்குரைஞா் முத்திருளப்பன் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இம்முகாமில் டி.ஆா்.ஆா்.எம். தொண்டு நிறுவனத்தின் பணியாளா் இந்து உள்பட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை, கமுதி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட தன்னாா்வ தொண்டா் முனியசெல்வம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT