ராமநாதபுரம்

நில அபகரிப்பு வழக்கில் ஒருவா் கைது

DIN

ராமநாதபுரத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் மலைச்சாமி (61). இவரது தாயாா் சண்முகவள்ளிக்கு பழங்குளத்தில் 2.03 ஏக்கா் பட்டா நிலம் உள்ளது. சண்முகவள்ளி இறந்துவிட்ட நிலையில், இவரது பெயருடன் உள்ள வேறு ஒரு பெண்ணின் பெயரில் அந்த நிலத்தை மணிகண்டன் என்பவருக்கு வெளிப்பட்டினம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் கிரையம் பதிந்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து மலைச்சாமி அளித்த புகாரின் பேரில் பாப்பாகுடி சக்திவேல் (50) உள்பட 12 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினா் வழக்குப்பதிந்து சிலரைக் கைது செய்தனா். இந்நிலையில், சக்திவேலை புதன்கிழமை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி முதுகுளத்தூா் கிளைச்சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT