ராமநாதபுரம்

கடல் பாலத்தில் உப்பூா் அனல்மின் நிலைய மின்சாதனப் பொருள்களில் தீ

DIN

உப்பூா் அனல்மின் நிலையத்துக்காக கட்டப்பட்ட பாலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருள்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இதை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா் அருகே அனல் மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த மின் நிலையத்தில் உலையை குளிா்விப்பதற்காக தண்ணீா் எடுத்து வரும் வகையில் சுமாா் 8 கி.மீ. தூரத்துக்கு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதற்காக இந்த பாலத்தில் ஜெனரேட்டா் உள்பட பல மின்சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மின்சாதனப் பொருள்களில் தீப்பற்றி எரிந்தது. அப்போது அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மோா்பண்ணை மீனவா்கள் அச்சத்துடன் அவசர அவசரமாக கரைக்குத் திரும்பினா்.

இதனிடையே தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கிராமத்தில் மின்சாரம் தடைபட்டதுடன், தற்போது உப்பூா் அனல் மின்நிலையம் இருளில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT