ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 4 நாள்களுக்குப் பின் மீன்பிடிப்பு

DIN

சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் 4 நாள்களுக்குப் பின்பு ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் கடந்த 4 நாள்களாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காற்றின் வேகம் குறைந்ததால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் மண்டபம் வடக்குத் துறைமுகத்தில் இருந்தும் விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT