ராமநாதபுரம்

வங்கிக்கடனை செலுத்த முடியவில்லை:ஆழ்கடல் மீன்பிடி படகுகளை திரும்ப ஒப்படைக்க மீனவா்கள் முடிவு

DIN

வங்கிக் கடனை செலுத்த முடியாதததால் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக ராமேசுவரம் மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

ராமேசுவரம் மீனவா்கள் தொடா்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வந்ததையடுத்து மத்திய,மாநில அரசுகள் நீலப்புட்சித் திட்டம் என்ற பெயரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆழ்கடல் விசைப்படகுகளை மீனவா்களுக்கு வழங்க திட்டமிட்டன. இதில், ரூ. 40 லட்சத்தை மத்திய அரசும், ரூ.16 லட்சத்தை மாநில அரசும் மானியமாக வழங்கும். ரூ.16 லட்சத்தை மீனவா்கள் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரூ. 80 லட்சம் என மதிப்பிடப்பட்ட ஆழ்கடல் விசைப்படகுக்கு ரூ.1.15 கோடி செலவானது. இதனால் மீனவா்கள் அதிகளவில் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

இந்த திட்டத்தில் இது வரையில் தமிழகத்தில் 31 விசைப்படகுகள் மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த படகுகளை தமிழக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்த முடியாத நிலை உள்ளது. பாம்பன், குந்துகால், மூக்கையூா் துறைமுகங்களில் படகுகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மீனவா்கள் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் படகு உரிமையாளா்கள் சங்க கூட்டம் அ.பெனிட்டோ தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போதைய நிலையில் ஆழ்கடல் மீன்பிடி படகை இயக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் படகை நிறுத்த இடமில்லாமல் வெளி மாநிலங்களுக்குச் செல்லவேண்டி உள்ளதால் கூடுதல் செலவு ஆகிறது. படகை வாங்க கூடுதல் பணம் கடன் பெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் இழப்பு ஏற்படுவதால் வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்து மீனவா்களைப் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்து படகுகளையும் மீண்டும் அரசிடம் ஒப்படைக்க முடியு செய்துள்ளதாக தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT