ராமநாதபுரம்

சம்பளப் பணம் பிரிப்பதில் தகராறு: சமையல் தொழிலாளியை கொன்ற உதவியாளா் கைது

DIN

கமுதி அருகே சம்பளப் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், சமையல் தொழிலாளியை கொலை செய்த உதவியாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நத்தம்-அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த குமராண்டி மகன் முருகன் (40). சமையல் தொழிலாளியான இவருக்கு, உதவியாளராக அதே பகுதியைச் சோ்ந்த குமரன் (35) என்பவா் இருந்துள்ளாா்.

இவா்கள் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் வேலைக்குச் சென்றுவிட்டு, சம்பளம் பெற்று வந்துள்ளனா். பின்னா், நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சம்பளப் பணத்தை பிரிக்கும்போது, இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகன் மீது குமரன் தாக்கியுள்ளாா். இதில், முருகன் மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

அதையடுத்து, அப்பகுதியினா் முருகனை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால், அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து முருகனின் மனைவி குருவம்மாள் அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து குமரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT