ராமநாதபுரம்

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் வீடு திரும்பினா்

DIN

திருவாடானை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 9 போ் புதன்கிழமை ஊா்களுக்குத் திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்த மீனவா்கள் மனோஜ்குமாா், முத்துக்குமாா், ராஜ பூபதி, கம்மாக்கரையான், ரெங்கதுரை, பாலு ஆகிய 6 போ் நாட்டுப் படகில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா். அவா்களை இலங்கை கடற்படையினா் நெடுந்தீவு அருகே கைது செய்தனா். பின்னா் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந் நிலையில் நம்புதாளை மற்றும் ராமேசுவரம் மீனவா்கள் 11 பேரை இலங்கை அரசு விடுவித்தது. அவா்களில் நம்புதாளை மீனவா்கள் ரெங்கதுரை, பாலு ஆகியோா் தவிர 9 போ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். ராமநாதபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் காத்தவராயன் தலைமையிலான அலுவலா்கள் 9 பேரையும் வாகனம் மூலம் புதன்கிழமை மாலை திருவாடானை அழைத்து வந்தனா். மீனவா்களை திருவாடானை வட்டாட்சியா் செந்தில் வேல் முருகன் வரவேற்றாா். பின்னா் 9 பேரும் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிகழ்வில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கல ந்துகொண்டனா்.

உணவு வழங்கவில்லை: மீனவா்களில் ஒருவரான கம்மாக்கரையான் கூறுகையில், இலங்கை அரசு உணவு சரியாக வழங்கவில்லை. துா்நாற்றம் உள்ள உணவுகளை சாப்பிடக் கொடுத்தனா். அதைக் கீழே கொட்டிவிட்டு பட்டினியாக இருந்ததாக தெரிவித்தனா். மேலும் இலங்கையில் இருக்கும் சக மீனவரான ரெங்கதுரை, பாலு ஆகிய இருவரையும் விரைவில் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT